EPFO கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்..!! உங்களுக்கு சேர்ந்துவிட்டதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் சேர்ந்துவிட்டதா? என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக பார்க்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கிறது. அதே தொகையை அவர்களது நிறுவனமும் பங்களிக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கும், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் இந்த தொகை செல்லும் நிலையில், EPFO கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.

6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிப்ரவரி 2024ஆம் ஆண்டில் வட்டி விகிதத்தை 0.10% அதிகரித்தது. அதாவது, 2023-24ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25%ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வட்டித் தொகை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு வந்துவிட்டதா? என்பதை EPFO இணையதளம், மிஸ்டு கால், உமாங் செயலி அல்லது SMS மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?

* முதலில் www.epfindia.gov.in இணையதளத்திற்கு சென்று லாக் இன் செய்து கொள்ள வேண்டும். அதில், Our Services என்ற டேபை கிளிக் செய்து, அதிலுள்ள For Employees என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

* பின்னர், PF Passbook View என்பதை க்ளிக் செய்து, EPF கணக்கில் உள்ள மாதாந்திர பங்களிப்புடன் மொத்த EPF இருப்பையும் தெரிந்துகொள்ள முடியும்.

* உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க, உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, லாக் இன் செய்ய வேண்டும். பின்னர், View Passbook என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, UAN எண்ணை உள்ளிட வேண்டும்.

* அப்போது, EPF கணக்கில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட வேண்டும். பின்னர், இ-பாஸ்புக்கை தேர்வு செய்து, இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம்.

* அல்லது, 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு, EPFOHO UAN ENG என்ற வடிவத்தில் SMS அனுப்ப வேண்டும். தமிழில் விவரங்களை அறிய விரும்பினால், EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும். இப்போது உங்களுக்கு EPF கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை குறித்த விவரம் வந்துவிடும்.

* இல்லையென்றால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தாலும், PF விவரங்களுடன் SMS வரும். அதில், EPF கணக்கில் இருப்புத் தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Read More : சொர்க்க வாசலுக்கு 999 படிக்கட்டுகள்..!! 5,000 அடி உயரம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Chella

Next Post

'பொருளாதரத்தை மீட்க அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கல்' - பாகிஸ்தான் பிரதமர் முடிவால் மக்கள் அதிர்ச்சி..!!

Wed May 15 , 2024
மிகவும் மோசமான நிதி பிரச்சனைகளை எதிர்கொள்டுள்ள பாகிஸ்தான் அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் தனியார்மயமாக்கல் முக்கியமானது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு அரசு முதலீட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு […]

You May Like