விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..
மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்..
இந்த நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக நேற்று சென்னையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் விஜய் மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் பேசியதாக கூறப்படுகிறது..
விஜய்யிடம் இருந்து தனக்கு 200 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று சங்கீதா தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.. தன்னோடு சேர்த்து மகன், மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் என சங்கீதா தரப்பு கூறியது.. ஆனால், மகன், மகளை தான் பார்த்துக் கொள்வதாகவும், சங்கீதாவுக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் தர முடியும் என்று விஜய் தரப்பு கூறியுள்ளதாம்..
ஆனால் சங்கீதா தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.. வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து அடிப்படையில் செட்டிமெண்ட் கோரிக்கையை சங்கீதா முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது..
எனினும் இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பரம் பிரிந்து செல்ல எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.. சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது..
Read More : திடீர் ட்விஸ்ட்..! விசில் இல்லை.. டிவி சின்னத்திற்கு ஓட்டு போடுங்க.. சுயேச்சைக்கு விஜய் ஆதரவு..!



