இது எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? CM ஸ்டாலினுக்கு லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ள நிலையில், ஊழல் திமுக ஆட்சியை ஒழிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாக மோடி பதிவிட்டிருந்தார்.. இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியை தான் தரும் என்று தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?

Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்? 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது. AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்கு தான் நீங்கள் போகவில்லை.

மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா? இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா? கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு? நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள்.

மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது. ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : “பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத் தான் தரும்..” துரோகங்களை பட்டியலிட்டு பிரதமருக்கு ஸ்டாலின் பதிலடி..!

RUPA

Next Post

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும்? இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!

Fri Jan 23 , 2026
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பலருக்குத் தேவையான புரதத்தைப் பெறுவதற்கு சிக்கன் ஒரு எளிதான மற்றும் மலிவான வழியாகும். சாலடுகள், சூப்கள், முதல் பிரியாணி வரை, சிக்கன் இல்லாமல் வாழ முடியாத பலர் உள்ளனர். ஆனால் சிக்கன் ஆரோக்கியத்திற்கு நல்லதா? தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பது சிக்கன் ஏன் ஒரு சிறந்த புரதம்? சிக்கன் ஒரு உயர்தர புரதமாக அறியப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான 20 […]
Chicken 2025

You May Like