KYC Update பெயரில் புதிய மோசடி.. இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க!

kyc account 1

“உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளது… உடனடியாக KYC Update செய்யுங்கள்” என்ற மெசேஜ் செல்போனுக்கு வந்தால், அதை சாதாரண வங்கி அறிவிப்பாக நினைத்து உடனே செயல்பட வேண்டாம். KYC புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடிக்காரர்கள் அனுப்பும் போலி Link அல்லது APK File-ஐ பயன்படுத்தினால், உங்கள் வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் சிக்கலாம்.


டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து புதிய வடிவங்களை எடுத்து வரும் நிலையில், தற்போது KYC Update என்ற பெயரை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை வெளியாகியுள்ளது. வங்கி கணக்கு முடக்கம், பணப் பரிவர்த்தனை நிறுத்தம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அவசரத்தை உருவாக்குவதுதான் இந்த மோசடியின் முக்கிய உத்தியாக உள்ளது.

பொதுவாக SMS, WhatsApp அல்லது Email மூலம் இப்படிப்பட்ட தகவல்கள் அனுப்பப்படுகின்றன. “KYC Update செய்யவில்லை என்றால் உங்கள் Account Block செய்யப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நேரங்களில் வங்கியின் பெயர் மற்றும் Logo போன்றவற்றையும் பயன்படுத்துவதால், அது உண்மையான தகவல் போல தோன்றும்.

அந்த மெசேஜுடன் ஒரு Link அனுப்பப்பட்டிருக்கலாம். அதை திறந்தவுடன் வங்கியின் அதிகாரப்பூர்வ Website போன்ற தோற்றத்தில் ஒரு போலி பக்கம் திறக்கலாம். அங்கு Account Number, Debit Card அல்லது Credit Card விவரங்கள், Login Details, Password, PIN, OTP போன்ற முக்கிய தகவல்களை உள்ளிடும்படி கேட்கலாம்.

இந்த தகவல்களை மோசடிக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், அவற்றை வைத்து அடுத்தகட்ட நிதி மோசடிக்கு முயற்சி செய்யலாம். எனவே, KYC என்ற பெயரில் வரும் எந்த Link-ஐயும் அவசரமாக திறந்து தகவல்களை பதிவு செய்யக்கூடாது. இதற்கும் மேலாக தற்போது கவனிக்க வேண்டியது BANK APK Scam.

சில மோசடிகளில் KYC Update செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு APK File-ஐ WhatsApp அல்லது பிற தகவல் தொடர்பு வழிகளில் அனுப்பி, அதை மொபைலில் Install செய்யும்படி வற்புறுத்தலாம். வங்கி App போல தோன்றும் அந்த APK, அதிகாரப்பூர்வமான வங்கி App ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற APK மோசடிகள் தொடர்பான சம்பவங்களும் வெளியாகியுள்ளன.

அந்த செயலியை Install செய்த பிறகு, மொபைலில் பல்வேறு Permissions கேட்கப்படலாம். அவற்றை அனுமதித்தால் சாதனத்தில் இருக்கும் சில தகவல்களை அணுகும் வாய்ப்பு உருவாகலாம். குறிப்பாக வங்கி Login தகவல்கள், OTP மற்றும் பிற முக்கிய தரவுகள் மோசடிக்காரர்களின் இலக்காக மாறலாம்.

சமீபத்தில் KYC பெயரில் APK File Install செய்ய வைத்த மோசடியில் ஒருவர் லட்சக்கணக்கான ரூபாயை இழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. KYC முடிக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற அச்சத்தை உருவாக்கி, பின்னர் தீங்கிழைக்கும் APK-ஐ Install செய்ய வைத்ததே அந்த மோசடியின் நடைமுறையாக இருந்தது.

அதனால் KYC Update தேவைப்பட்டால், SMS அல்லது WhatsApp-ல் வரும் Link-ஐ பயன்படுத்தாமல், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அதிகாரப்பூர்வ App அல்லது Website-ஐ நீங்களே திறந்து சரிபார்க்க வேண்டும். தேவையான தகவல்களை வங்கியின் அதிகாரப்பூர்வ Customer Care அல்லது கிளை மூலமாகவும் உறுதி செய்யலாம்.

மொபைலில் புதிய App ஒன்றை Install செய்யும்போது, குறிப்பாக வங்கி தொடர்பான App என்றால், WhatsApp, SMS அல்லது Email மூலம் வரும் APK File-ஐ பயன்படுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வ App Store அல்லது சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் App-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும், Account Login Password, ATM PIN, Card CVV, OTP உள்ளிட்ட ரகசிய தகவல்களை தொலைபேசியில் கேட்கும் நபர்களிடம் பகிரக்கூடாது. சந்தேகத்திற்குரிய Link-களிலும் இந்த தகவல்களை பதிவு செய்யக்கூடாது.

KYC தொடர்பான உண்மையான தேவையை சரிபார்க்காமல், “இப்போதே Update செய்யுங்கள்”, “இல்லையென்றால் Account Block ஆகும்” என்ற அவசர மெசேஜ்களுக்கு பதிலளிப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம். KYC Update என்ற பெயரில் வரும் Link-ஐ கிளிக் செய்வதற்குப் பதிலாக, உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ App அல்லது Website வழியாக நேரடியாகச் சரிபார்ப்பதே பாதுகாப்பான நடைமுறை.

Also Read: இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்.. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம்!

Saranya

Next Post

தெருநாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற நபர்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

Wed Sep 23 , 2026
வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் கோடாரியுடன் வந்த நபர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை விரட்டியதுடன், ஒரு நாயை பிடித்து தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களும் அவரது ஆவேசத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் நரேந்திர அகிர்வார் தனது […]
fa1aec7c3685eda2dc7462a3155c99f76cf8ede6416a8f8c82c2b758cedc3921

You May Like