ஆடம்பர வாழ்க்கைக்காக கொடூரம்!. பலரிடம் கைமாறிய பச்சிளம் குழந்தை!. 1 லட்சத்தில் தொடங்கி 3.5 லட்சத்தில் முடிந்த பேரம்!. இரக்கமற்ற பெற்றோர்!

phone child sale 30kb

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் தங்க நகை வாங்குவதற்காக, தங்களுக்குப் பிறந்த ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.1.2 லட்சத்திற்கு பெற்றோர் விற்ற கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரிடம் கைமாறிய அந்த குழந்தை ஹைதராபாத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெற்றோர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள முகுந்த்வாடி பகுதியில் வசித்து வந்த தம்பதி, தங்களின் ஒரு மாத ஆண் குழந்தையை சீமா ரேஷ்வால் என்ற இடைத்தரகரிடம் ரூ.1.2 லட்சத்திற்கு விற்றுள்ளனர். குடும்பத்தின் அவசர தேவைக்காகவோ, வறுமையின் காரணமாகவோ அவர்கள் இதை செய்யவில்லை. மாறாக, குழந்தையை விற்ற பணத்தைக் கொண்டு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களையும், தங்க நகைகளையும் வாங்கியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், ஆடம்பரத்திற்காக அவர்கள் குழந்தையை விற்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், குழந்தை மாநிலம் விட்டு மாநிலம் பல கைகளுக்கு மாறியுள்ள பகீர் பின்னணி தெரியவந்தது.

ஆரம்பத்தில் பெற்றோரால் சீமா ரேஷ்வாலிடம் ரூ.1.2 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை, அங்கிருந்து படேகான் பகுதியைச் சேர்ந்த சங்கீதா அவாத் என்பவருக்கு ரூ.2.7 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. பின்னர், சங்கீதா அந்த குழந்தையை சுரேஷ் குண்டுகா என்ற போலி மருத்துவரிடம் ரூ.3.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். இறுதியாக, போலி மருத்துவரான சுரேஷ் அந்த குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள தனது உறவினரான உமா கட்கம் என்பவரிடம் அதே தொகைக்குக் கொடுத்துள்ளார். இவ்வாறு மிகக் குறுகிய காலத்திலேயே மகாராஷ்டிராவில் இருந்து ஹைதராபாத்திற்கு அக்குழந்தை பலரிடம் கைமாறியுள்ளது.

முகுந்த்வாடி காவல் ஆய்வாளர் விவேக் சோனாவனே தலைமையிலான போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு, ஹைதராபாத்தில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். தற்போது அக்குழந்தை குழந்தைகள் நலக் குழுமத்தின் (CWC) பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர், இடைத்தரகர்கள் சீமா, சங்கீதா, போலி மருத்துவர் சுரேஷ் உட்பட 7 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை விற்ற பணத்தில் பெற்றோர் வாங்கியிருந்த செல்போன்கள் மற்றும் நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கும்பலுக்குப் பின்னால் பெரிய அளவிலான குழந்தை கடத்தல் நெட்வொர்க் செயல்படுகிறதா? வேறு ஏதேனும் குழந்தைகளை இவர்கள் இதேபோல விற்றுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

அனல் பறக்கும் இடைத்தேர்தல்..!! தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!! இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!!

Wed Sep 30 , 2026
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று (செப்.30) தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 6ம் தேதி தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் சத்யபாமாவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் இன்று தொகுதிக்கு நேரில் வருகை தந்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதையொட்டி தாராபுரம் – உடுமலைப்பேட்டை […]
CM Vijay 2026 4

You May Like