fbpx

கவனம்.. இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்காதீங்க.. இந்த பிரச்சனைகள் ஏற்படும்..

இந்த வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர்.. அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர்.. ஆனால் இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வளவு மோசமாக பாதிக்கும் தெரியுமா? உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்… மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு சரியாக ஜீரணமாகாது, இதன் காரணமாக எடை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல், வாயு அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளன. சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். எனவே, உங்களின் கடைசி உணவை, அதாவது இரவு உணவை உறங்குவதற்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

நள்ளிரவு பசிக்கு என்ன செய்வது..? உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் அல்லது சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருந்தால், தூங்குவதற்கு முன் அல்லது நள்ளிரவில் தூங்குவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவதால் உங்களுக்கு மிகவும் பசியாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நள்ளிரவு பசியை போக்க என்னென்ன விஷயங்களை உணவில் சேர்க்கலாம் என்பதை பார்க்கலாம்..

  • தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பால் எடுத்துக் கொள்ளலாம்.
  • மிதமான பசியைக் குறைக்க ஒன்று அல்லது இரண்டு குக்கீகள் அல்லது பிஸ்கட் சாப்பிடலாம்.
  • முழு தானிய கொழுப்புக் குறைந்த பாலை குடிக்கலாம்..

Maha

Next Post

#Breaking: 13,000 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு...!

Sat Jul 2 , 2022
13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. 13,000 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த பணிக்கு 7500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் […]

You May Like