fbpx

தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் அத்திப்பழம்..!

அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம்.

உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, தசை இறுகும் மற்றும் எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது.

தேவையான பொருட்கள் : பால், அத்திப்பழம், தேன், நாட்டு சக்கரை. செய்முறை விளக்கம் :அத்திப்பழத்தை சரளமாக நசுக்கி வெயிலில் காய வைத்து அரைத்து பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேகரித்து அதனை சூடான பாலில் சேர்த்து அத்துடன் சில துளி தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து அருந்தி வரலாம்.

குழந்தைகளுக்கு இருக்கும் மலச்சிக்கலை குணமாக்கும். அத்திப்பழ பொடியை பாலில் சேர்த்து கொடுத்து வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல் தீர்வு பெறும். பெண், ஆண் என இருபாலரும் தினமும் ஐந்து முதல் பத்து வரை காலை மாலை அத்திப்பழத்தினை உண்டு வந்தால் நல்லது. மேலும், இதனால் ஆண்களுக்கு விந்தணுக்கள் விருத்தியாகும் என்று அறியப்படுகிறது.

Baskar

Next Post

புதிய தகவல்...! கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு... உயர் கல்வித் துறை விளக்கம்...!

Sat Nov 19 , 2022
கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற […]

You May Like