fbpx

செம்பருத்தி பூவை தினமும் சாப்பிட்டால் இதய பிரச்சனையே வராது… மேலும் பல நன்மைகள்…

செம்பருத்தி செடியில் இருக்கும் பூ, இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள ஒன்றாக இருக்கிறது. செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எவ்வாறு பயன்படுத்தி வருவதனால் என்னென்ன மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.

செம்பருத்தி பூவினை எடுத்து அதனை தண்ணீரில் நன்கு அலசி கொள்ள வேண்டும். பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அதன் இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும்.

செம்பருத்தி பூவினை தினமும் எடுத்து கொண்டு வருவதால் உடம்பின் சோர்வுகள் நீங்கும் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது. அத்துடன் இரத்தத்திலுள்ள கொழுப்புகளையும் முழுவதும் கரைக்க உதவுகிறது. செம்பருத்தி பூவினை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருதல் நல்லது.

இதனை தொடர்ந்து இதய நோயாளிகளுக்கு வருகிற வலி, படபடப்பு மற்றும் ரத்தக்குழாயின் அடைப்புகள் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது. மேலும் செம்பருத்தி பூவை பச்சையாகவும் பறித்து நன்கு நிழலில் காய வைத்து அதனை பொடி செய்து பாடலிலும் கலந்து காலை மற்றும் மாலை நேரங்களில் குடித்து வருவதால் நன்மை பெறலாம். 

மேலும் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும் இவை பயன்படுகிறது. மேலும் வயிற்றுப்புண் ,வாய்ப்புண்கள் செம்பருத்தி பூவை தினந்தோறும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தோள்கள் மென்மையாக இருக்க செம்பருத்தி பூ பயன்படுகிறது. தோலில் எப்பொழுதும் ஈரம் பதத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த செம்பருத்தி பூ உதவுகிறது.

Rupa

Next Post

பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் மஞ்சட்டி... இவ்வளவு நன்மைகளா?

Sun Jan 8 , 2023
மஞ்சட்டி என்ற பொருள் அனைத்து வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. இது பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, மஞ்சட்டி என்பதனை உட்கொண்டால் இரத்தத்தை சுத்திகரித்து மற்றும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி ஆகுவதும் சீராக இருக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு என்ற ஒன்று பெண்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாக இந்த நாட்களில் உள்ளது. பெண்களிடையே உடலின் கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கியதால் சில […]

You May Like