உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பழங்களையும் அதனுடைய பயனையும் அறிந்து கொள்வதை தவிர்த்து விடுகிறோம். அவ்வாறு நாம் மறந்த ஒரு பழமான கிவி பற்றி இங்கே அறிவோம்.
சில ஆய்வில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழமானது நன்மை பயக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனளிக்கிறது. இதில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது.
குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் செரிமானத்திற்கும் இது பெரிதும் நன்மை பயக்கிறது. மேலும் , இந்த பழம் இயற்கையான மலமிளக்கி. எனவே இது மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உடலில் ஏற்படும் தொற்று மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அத்துடன் பூஞ்சை எதிர்ப்பு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் கிவி பழத்தில் அமைந்துள்ளது.
உடலை புத்துணர்ச்சியூட்டும் பழமாகவும் மற்றும் மேல் சுவாசக்குழாயில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் சளி, காய்ச்சலின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது.