பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் அதிக அளவில் ஏற்படும் ரத்த போக்கினால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஊட்ட சத்துக்களை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக தான் பேரீச்சம்பழம் உதவுகிறது. இது பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க பெரிதும் பயன்படுகிறது.
3 பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் ஞாபக சக்தி நரம்புத் தளர்ச்சி, கைகால் தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகிறது.மேலும் வேலைப்பளு உள்ளவர்கள், மன உளைச்சல் உள்ளவர்கள், விரதம் இருப்பவருக்கும் இது எனர்ஜியை கொடுத்து உதவுகிறது.
பேரீச்சை பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் வயிற்றுப்போக்குக்கிற்கு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. அத்துடன் இந்த பேரிட்சையானது பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயினை கட்டுபடுத்தி ,எலும்பு தேய்மான நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.