மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலும், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது.
சோர்வடைந்து இருந்தாலோ அல்லது பலவீனமாகவோ இருந்தாலோ , தண்ணீர் குடிப்பது மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கின்றது. அத்துடன் தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இயங்குவதுடன் , உடலுக்கும் ஆற்றல் கிடைக்கச் செய்கிறது. மனிதனில் பலர் இன்று மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம், மனக்கவலையை குறைத்து கொள்ளலாம்.