நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம்.
தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.
செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தூதுவளை இலையை சேர்த்து மேலும் பண வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் அளவு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அதனை எடுத்து ஆற வைத்து வெதுவெதுப்பாக வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வர வேண்டும். மூச்சுத் திணறலை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யவில்லையெனில் அது பிற்காலத்தில் ஆஸ்துமாவாக மாறிவிடும். தூதுவளையின் பொடியானது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் அத்துடன் பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கம் ஆகியவற்றையும் சரி செய்ய பயன்படுகிறது.