உடலுக்கு அதிக பலம் மற்றும் சத்துகளை தருவதில் பேரீச்சம்பழமும் ஒன்றாக அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் இதில் சத்துகள் மட்டுமின்றி இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. அதனை பற்றி இங்கே காணலாம்.
பேரீச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவை சிறிய அளவில் தான் என பலருக்கும் தெரிவதில்லை. அதனை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இவற்றில் மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பி வைட்டமின்கள், வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. கார்போஹைட்ரேட் பொருள். 100 கிராம் பேரிச்சம்பழத்தில் 75 கிராம் கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடவே யோசனை செய்கிறார்கள்.
இதனையடுத்து பேரிச்சம்பழத்தில் கரையாத மற்றும் கரையக்கூடிய பல நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் சாப்பிட்டவுடன் உடனடியாக ரத்தத்தில் உறிஞ்சப்படாமல், நார்ச்சத்து செரிமானத்தை குறைத்து விடுகிறது. இதன் காரணமாகவே , இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென உயராமல் இருக்கிறது. எனவே இரத்தச் சர்க்கரைக் அளவு குறைவாக உள்ளவர்கள் அச்சமின்றி பேரிச்சம்பழத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழத்தினை சாப்பிட்டு வரலாம். இதனை தவிர,வால்நட்ஸுடன் மற்றும் பாதாம் பருப்புடன் உண்பது உடலுக்கு அதிக நன்மையை தரும். பேரிச்சம்பழத்தில் உள்ள கிளைசெமிக் குறியீட்டு எண் 44-53க்கு இடையில் தான் இருக்கிறது. இது நடுத்தரமானது. இந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உணவிலிருந்து கார்போஹைட்ரேட்டுகள் எவ்வளவு வேகமாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படும் என்பதனை பற்றி குறிப்பிடுகிறது.