குளிர் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பை என்று தெரிந்தாலும், அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது… வீடு, அலுவலகம், பார்ட்டி என எல்லா இடங்களிலும் மக்கள் குளிர்பானம் அருந்துவதைக் காணலாம். ஆனால் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..
குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால், அது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். குளிர் பானங்கள் குடிப்பதால் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, உடல் பருமனும் ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதால் ஏற்படும் தீமைகள்
- குளிர் பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது குழந்தைகளின் எடையை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும்.
- குளிர் பானங்கள் குடிப்பதால் குழந்தைகளின் கல்லீரல் பாதிக்கப்படும்.
- குளிர் பானங்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். இதனால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும்.
- குளிர்பானங்கள் குடிப்பதால் குழந்தைகளின் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், இதனால் பசி இழப்பு ஏற்படும்
- இதனை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.
- குளிர் பானங்கள் அமிலத்தன்மை மற்றும் அதிக சர்க்கரை கொண்டவை, இது குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும்.
- தொடர்ந்து குளிர் பானங்களை உட்கொள்வதால், குழந்தைகளின் வயிற்றில் கொழுப்பு சேரும், இதன் காரணமாக தொப்பை அதிகரிக்கத் தொடங்குகிறது.
- குளிர் பானங்களில் உள்ள காஃபின் காரணமாக குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படும்.
- குளிர் பானங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கும்.
- இதன் நுகர்வு உடலின் சமநிலையை சீர்குலைக்கும்.
குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்..? சாதாரண தண்ணீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் தாகம் தணிவதுடன், நீர்ச்சத்துடன் இருக்கும். சர்பத், ஜூஸ், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.