தேங்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, புரதச் சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என்று உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் இந்த தேங்காயில் காணப்படுகிறது.
தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள், நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிறு குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் சுத்தமான தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. அத்துடன் சிறுநீரக கற்கள் இருக்கின்ற நோயாளிகளும் இந்த பாலை அருந்தலாம்.
இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னரே தேங்காயை சாப்பிட்டு வருகின்ற போது, இதில் உள்ள நார்ச்சத்துகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு , மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது.
இதனையடுத்து தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தேங்காய்ப்பால் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம். மேலும் இதில் செலினியம் மற்றும் புரதம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.