fbpx

புற்றுநோயை தடுப்பது முதல் உடல் எடையை குறைப்பது வரை.. இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்..

தற்போது உள்ள கால கட்டத்தில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம் ஆனால் சத்தான உணவுகளை சாப்பிடுகிறோமா? உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுகிறோம். இன்று புற்று நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதி படுபவர்கள் கோடிக்கணக்கில் மருத்துவமனையில் போய் செலவு பண்ணுவது உண்டு ஆனால் செலவே இல்லாத சத்தான உணவுகளை சாபிட்டு இருந்தால் இந்த குரைபாஉ வந்திருக்காது.

அப்படி செலவே இல்லாத அதே சமயம் புற்று நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றை தடுக்கும் ஒரு சிறந்த பொருளை பற்றி தெரிந்துகொள்ளலாம். அது தான் பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பு. ஆம், பச்சை பயிறு தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை கிடைக்கும், அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

மேலும், பாசி பருப்பை அன்றாடம் நமது உணவில் சேர்த்து வருவதால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு கொலஸ்ட்ரால் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதன் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் பச்சை பயிறை சேர்த்து கொண்டால் போதும், ஏனென்றால் பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளதால் இது உடலுக்கு தேவையான அனைத்து இரும்புச்சத்தையும் கொடுத்து இரத்த சோகை ஏற்படுவதை தவிர்கிறது.

இந்த பச்சை பயறு சாப்பிடுவதால் வரும் பெரிய நன்மை, சரும புற்றுநோயில் இருந்து சிறந்த பாதுகாப்பு அளிக்கும். ஆம், ஒருவேளை நீங்கள் அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுபவராக இருந்தால் உங்கள் உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும், தற்போது உள்ள அனைவரும் ஒரு பெரிய பிரச்சனை உடல் பருமனை குறைப்பது. அதற்கு பச்சை பயறு எடுத்து கொண்டால் உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

Maha

Next Post

இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு வட்டி சதவீதம் அதிகரிப்பு...! எவ்வளவு தெரியுமா...? முழு விவரம் உள்ளே..‌‌

Thu Aug 11 , 2022
வங்கி வாடிக்கையாளர்களே, உங்களுக்கான அறிவிப்பு இதோ. ஐசிஐசிஐ வங்கியானது நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 9 முதல் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு புதிய விகிதங்கள் பொருந்தும். இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதை அடுத்து, வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து மூன்றாவது உயர்வு. ஐசிஐசிஐ […]

You May Like