பொதுவாக தை மாதம் தொடங்கினாலே பனங்கிழங்கு சீசன் வந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பலவகையான சத்துக்களை கொண்ட பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பனை மரத்தில் கிடைக்கும் பனம்பழத்தின் மூலமாக பனங்கிழங்கு நமக்கு கிடைக்கிறது. மண்ணுக்கு அடியில் வளரும் இந்த கிழங்கை உண்டு வந்தால் இரும்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, நீர்ச்சத்து மற்றும் விட்டமின் பி போன்ற சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன.
மேலும் பனங்கிழங்கில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நம்மில் பலருக்கும் இருக்கும் மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்துகிறது. இந்த கிழங்கில் இருக்கும் இரும்புச்சத்து நம் உடலில் எலும்புகளை வலுப்பெற செய்கிறது.
மேலும் உடலில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கை காய வைத்து மாவாக அரைத்து அதில் கஞ்சி செய்து குடித்து வந்தால் நோய் சரியாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மண்ணுக்கு அடியில் விளையும் பனங்கிழங்கில் இனிப்புச் சத்து மிகவும் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலில் வாயு பிரச்சனை, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கு வேகவைக்கும் பொழுது இரண்டு பல் பூண்டு, சிறிது மிளகு சேர்த்து வேக வைக்க வேண்டும்.