தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம்.
நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் சற்று குணமாகும். எலுமிச்சை விதை, எலுமிச்சை தோல் மற்றும் எலுமிச்சை இலை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து சுடுநீரில் நன்கு கொதிக்க வைக்கப்பட வேண்டும்.
அதனை தொடர்ந்து அதிலிருந்து வரும் ஆவியை வேது பிடிக்க பலநாட்களாக இருக்கும் மூக்கடைப்பு கூட சரியாகி விடும். மேலும் நொச்சி இலையை எடுத்து நெற்றியில் வைத்து கொள்ள வேண்டும்.
சில தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி நொச்சி இலையின் மேல் தடவி கொடுத்து வர பாரமாக இருக்கும் தலைவலி சரியாகும். இவ்வாறு சில வழிமுறைகளை பின்பற்றினால் ஆரம்பத்திலேயே நோய்கள் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்து கொள்ளலாம்.