நம் முன்னோர்களின் காலகட்டத்தில் நரைமுடி என்பது வயதானதற்கான அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் நவீன காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நம் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாகும்.
நாம் அன்றாட வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான சத்துக்களை இழந்து வருகிறோம். நரைமுடி வளர்வதற்கு உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் சாப்பிடுவதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இதை சரி செய்ய கொய்யா இலையை பயன்படுத்தலாம் எப்படி என்பது குறித்து பார்க்கலாம்
1. முதலில் கொய்யா இலைகள் 10 முதல் 12 இலைகளை எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
2. பின்பு கொய்யா இலைகள், கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் போன்றவற்றை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
3. அரைத்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு குளிக்கலாம்.
4. இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நரைமுடியே வராமல் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.