fbpx

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இதய மருத்துவரை சந்தியுங்கள் !

மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் நடுப்பகுதியிலும் உணர முடியும்.

பெரும்பாலும் மாரடைப்புகள் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பின் மையத்தில் ஒரு அசௌகரியத்தை உண்டாக்கி அந்த வலியானது விட்டு விட்டு வரும். மேலும் இது மார்பு பகுதியில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மூச்சு விடுவதில் சிரமம் மாரடைப்பின் ஒரு முக்கியமான அறிகுறி ஆகும். இது மார்பு வலி இல்லாமலும் மேலும் மார்புப் பகுதியில் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் கூட இது ஏற்படக்கூடும் .

மேலும் இவை தவிர வியர்வை குமட்டல் லேசான தலைவலி ஆகியவையும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். மாரடைப்பு சிலருக்கு எந்தவித அறிகுறிகள் இல்லாமல் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டு நம் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, முறையான உடற்பயிற்சி தூக்கம் ஆகியவற்றை பேணுவதன் மூலம் இது போன்ற நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

Rupa

Next Post

193 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்...!

Mon Jan 30 , 2023
ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழந்ததாக கூறியதை அடுத்து கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 8.04 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இரவு 8.26 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது […]

You May Like