பொதுவாக பெண்களில் பலருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணமாக நீங்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆகையால் இந்த பிரச்சனை குணப்படுத்த அதற்கான பரிசோதனையை செய்து விட்டு உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
வெள்ளைப்படுதல் பிரச்சினையால் பெண்கள் உடல் ரீதியாக பல பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எரிப்பு மற்றும் அரிப்பு உணர்வு, முதுகில் வலி மற்றும் உடலில் விறைப்பு ஆகியவை இதனால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை சரிசெய்வதற்காக சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.
மாதுளை இலைகளை அரைத்து தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் செய்து குடித்து வருவதால் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளிலிந்து நிவாரணம் பெற்று வரலாம்.
கொய்யா இலையை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கஷாயம் போல் செய்து குடித்து வரலாம்.
கொய்யா இலைகளை கஷாயம் செய்து நாள்தோறும் காலை மாலையென இரண்டு வேளை குடித்து வருவதால் இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.