வலிப்பு என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இது தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அத்துடன் சரியான மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கர்ப்பிணிகள் வலிப்பு வந்தால் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலிப்பு நோய் குறித்து பயப்படத் தேவையில்லை என்றும், தாய்க்கு வலிப்பு ஏற்பட்டால், அவரது குழந்தைக்கும் வலிப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.