சுறுநீரக கற்கள் வந்தால் பலரும் அவதிப்படுவதை பார்க்கவே முடியவில்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றங்களை செய்தாலே போதுமானது.
முதலில் அன்றாட வாழ்வில் அனைத்து உணவிலும் உள்ள உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மசாலா, காரம், புளி ஆகியவற்றை சேர்த்தும் குறைத்துக் கொள்வது நல்லது.
தானிய உணவு வகையான கேழ்வரகு , கருணைக்கிழங்கு, தயிர், கீரைகள், வெள்ளைப்பூண்டு, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் போன்ற கால்சியம் மற்றும் புரதம் அதிகமுள்ள உணவு பொருள்களை அளவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது.
மேலும் பானங்களான தேநீர், காபி, குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், பாக்கெட் உணவுகள், சாக்லேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும், பாஸ்பேட் நிறைந்த உணவுகளை உண்பதை நிறுத்திக் கொள்வது சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு நல்லது.