குழந்தை பெற்றெடுத்த பெண்கள் தினமும் ஆறு மணி நேரமும் அதிகபட்சம் மொத்தம் எட்டு மணி நேரமும் தூங்க வேண்டும். அப்போது உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
ஆனால் தற்போது உள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்வதில்லை. பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதற்காக தூக்கத்தைக் குறைத்து கொள்கின்றனர். இந்த பழக்கம் எப்போதும் இவர்களுக்கு நல்லது இல்லை.
சரியான உறக்கம் இருந்தால் தான் உடல் நலன் சீராக பார்த்து கொள்ள முடியும். குழந்தையுடன் உறங்கும் தாய்மார்கள், அருகில் தூங்கும் குழந்தை எழுந்து விடுமோ என்ற ஐயத்திலே சரியாக தூக்கம் கொள்ளாமல் இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்ற தாய்மார்கள், மனநலம் மற்றும் தூக்க பழக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.