இப்போதைய காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஒரே நாளில் வீட்டு வைத்தியம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு தொண்டைப் புண் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது. முதலில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
மிளகை அரைத்து பொடி செய்து காலையில் ஒரு டம்ளர் பாலில் கலந்து படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு வர ஒரே நாளில் இருமல், தொண்டை வலி குணமாகும். மிளகில் பைபரின் என்ற தாவர வேதிப்பொருள் உள்ளது.
கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது மற்றும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது, தொற்று கிருமிகள் நமக்குள் நுழையாது.
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மிளகு தூள், மஞ்சள் தூள், இரண்டு பல் பூண்டு சேர்த்து அரை டம்ளர் வரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நெஞ்சு சளி, மூக்கில் அடைப்பு போன்றவை நீங்கும்.