உடலில் கொலஸ்ட்ரால் இருந்தாலே உடலுக்கு ஆபத்து என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிலுமே நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடாமல் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலுழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்க செய்கிறது.
எல்டிஎல் என்று சொல்லப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை கொள்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றால் ரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே தெரிய வருகிறது.
ஆனால் சில அறிகுறிகளை வைத்து நாமே அதனை கூர்மையாக கவனிப்பதன் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறியலாம், அவை,
அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்.
அதிகளவில் உடல் செயல்பாடு இல்லாமல் சோம்பேரி தனமாக இருத்தல்.
அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல்.
கல்லீரல் பலவீனமடைவது. இது அதிக கொலஸ்ட்ராப்களுக்கான ஒரு காரணமாகும்.