மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களிலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தை சீராக்குவதுடன், சரியான குடல் இயக்கத்துக்கு இது வழிவகுக்கிறது. அத்துடன் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதில் இருக்கும் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிற ஆன்டிஆக்சிடன்டுகளும் நிறைந்துள்ளது.
நாள்தோறும் மரவள்ளிக்கிழங்கினை எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஞாபக மறதியை குறைப்பதுடன், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக, மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. ஏனென்றால், மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகையான சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம். ஜவுளி தொழிலில் துணிகளுக்கு கஞ்சி போட்டு மொடமொடப்பான தன்மை ஏற்படுத்தவும் இது பயன்படுகிறது. அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.