சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் கூட்டு செய்து உண்டு வந்தால் ருசி அருமையாக இருக்கும். அதற்கான டிப்ஸ்.
தேவையான பொருட்கள்
வெந்த துவரம்பருப்பு – அரை கப்,
வெள்ளைப் பூசணி
புளித் தண்ணீர்,
எலுமிச்சைச் சாறு- சிறிதளவு,
உலர்ந்த மொச்சை – 50 கிராம்,
கொண்டைக்கடலை – 50 கிராம்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
தனியா – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.
உலர்ந்த மொச்சை,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
துருவிய தேங்காய் – அரை கப்,
எண்ணெய் – சிறிதளவு
உடைத்த உளுந்து – அரை டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
தேங்காய் துருவல் – கால் கப்,
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை விளக்கம்:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து வடிக்கவும். இதனையடுத்து பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து வேகவிட்டு வடிக்கவும். இதனை எடுத்து எண்ணெயில் சிவக்க வறுத்துப்பொறிக்க வேண்டும்.
பாத்திரத்தில் கொண்டைக்கடலை, வெந்த பூசணி, மொச்சை சிறிதளவு, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்க்கவும். அத்துடன் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் சேர்த்து தாளித்து இறக்கவும்.