11 மாவட்டங்களில் கனமழை… 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று…! வானிலை மையம் எச்சரிக்கை…!

heavy rain

தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத் தில் இன்று சில இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் 24-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில்லும், 25-ம் தேதி புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலுமும், 26-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 24-ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

துபாயில் விபத்துக்குள்ளான தேஜாஸ் விமானியின் கடைசி காணொளி!. இதயத்தை உடைக்கும் துயரம்!

Sat Nov 22 , 2025
துபாயில் விபத்துக்குள்ளான தேஜாஸ் ஜெட் விமானத்தின் விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் கடைசி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நம்னாஷ் சியால் உயிரிழந்தார். துபாயின் அல் மக்தூம் விமான நிலையத்தில் ஒரு டெமோ விமானத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க இந்திய விமானப்படை விசாரணை நீதிமன்றத்திற்கு […]
wing commander namansh syal video

You May Like