மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain

தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 9 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தலா 8 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தலா 7 செமீ, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருவாரூர் மாவட்டம் கொடவாசல், பெரம்பலூர் மாட்டம் வேப்பந்தட்டை, விழுப்புரம் மாவட்டம் வல்லம், மரக்காணம், வானூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

Vignesh

Next Post

கருட புராணம்!. இறந்தவர்களின் இந்த பொருட்களை ஒருபோதும் பயன்படுத்த கூடாது!. துரதிர்ஷ்டம், வறுமையை கொண்டுவரும்!

Fri Nov 7 , 2025
கருட புராணம் மற்றும் ஸ்வப்ன சாஸ்திரம் ஆகியவை இறந்த நபருக்குச் சொந்தமான சில பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் அபசகுனமானது என்று கூறுகின்றன. இந்த பொருட்கள் எதிர்மறை சக்தியையும், மூதாதையர் சாபங்களின் விளைவுகளையும் அதிகரிக்கின்றன, இது வாழ்க்கையில் துரதிர்ஷ்டம், வறுமை மற்றும் அமைதியின்மையைக் கொண்டுவரும். இறந்தவரின் எந்தப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது? வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்பான பல மர்மங்களை வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. இறந்த பிறகும், ஒரு நபரின் சில சக்தி அவர்கள் […]
garuda purana dead person

You May Like