Alert: இந்த 5 மாவட்டத்தில் கனமழை… மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை…!

rain

இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, ஒருசில இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 3-ம் தேதி கடலூர். விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

4-ம் தேதி கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களிலும், 5-ம் தேதி கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! இன்னும் 30 நாட்களில் விடுபட்ட நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000...!

Thu Jul 31 , 2025
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000., இன்னும் 30 நாட்களில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் […]
magalir thoga3 1694054771 down 1750124150 1

You May Like