Alert: தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை…!

rain 1

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெண்களே!. வேகமாக அதிகரிக்கும் தொப்பை கொழுப்பு!. மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!

Sat Nov 8 , 2025
தொப்பை கொழுப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இடுப்பைச் சுற்றி கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் கொழுப்பு இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உடல் பருமன், அல்லது வயிற்று கொழுப்பு அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் […]
belly fat

You May Like