கனமழை எதிரொலி…! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

MK Stalin dmk 6

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Vignesh

Next Post

சற்று முன்..! மேலும் 3 மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை...!

Wed Oct 22 , 2025
11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி,தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை கனமழைஎச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக […]
rain

You May Like