Alert: 14 மாவட்டத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

rain 1

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, ஜூன் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read more: அதிர்ச்சி..! நீதிபதி சென்ற கார் விபத்து…! 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…!

Vignesh

Next Post

ஒரு செல்பி எடுப்போமா?. பொக்கிஷமாகும் புகைப்படங்கள்!. இன்று இயற்கை புகைப்பட தினம்!.

Sun Jun 15 , 2025
இயற்கையின் அழகு மிகவும் பெரியது, உங்கள் கண்ணில் உள்ள லென்ஸ் அதை முழுவதுமாகப் பிடிக்க முடியாது, நீங்கள் அதை மற்றொரு லென்ஸ் மூலம் பார்க்க வேண்டும். இயற்கை உலகின் பரந்த தன்மையையும் முடிவற்ற அழகையும் படம்பிடிக்க உங்கள் கேமராக்கள் சரியான வழி. பசுமையான காடுகள், காலவரையற்ற கடல், பாறைகளில் உள்ள நுணுக்கமான விவரங்கள், அழகான வானவில், சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனம், வயதான மரங்கள் போன்றவை அனைத்தும் இயற்கை […]
Nature Photography Day 11zon

You May Like