கனமழை எதிரொலி… 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

rain school holiday

கனமழை எச்சரிக்கையால் 5 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். வரும் 25-ம் தேதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையால் 5 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆச்சரியம் ஆனால் உண்மை..!! உலகில் நதியே இல்லாத நாடுகள் எது தெரியுமா..? எப்படி உயிர் வாழ்கிறார்கள்..?

Mon Nov 24 , 2025
நாம் வாழும் பூமியில் நீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு மற்றும் தண்ணீர்தான் அடிப்படைத் தேவைகளாகும். பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்பது தெரிந்த விஷயம் என்றாலும், சில நாடுகள் தங்கள் நிலப்பரப்பில் நிரந்தரமான ஆறுகளே இல்லாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்த நாடுகள் எவை, மேலும் தங்கள் நீர்த் தேவையை அவை எப்படி பூர்த்தி செய்கின்றன என்பதை பற்றிப் பார்ப்போம். ஓர் ஆறு […]
River 2025

You May Like