Rain Alert: கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 2025 2

நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர். திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Vignesh

Next Post

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை...! மயங்கி விழுந்த அதிமுக முன்னாள் எம்‌.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி...!

Sat Jul 19 , 2025
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-21 வரை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். அதே காலத்தில் அவரது கணவரான பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக இருந்தார். பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக சத்யா பன்னீர்செல்வம் […]
sathiya 2025

You May Like