Rain: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை…!

rain school holiday

நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நாளை மேற்கண்ட பகுதிகளுடன் கன்னியாகுமரி. திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 25-ம் தேதி வரை மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட்நியூஸ்!. இனி இந்தியர்கள் UPI-ஐ பயன்படுத்தி சர்வதேச அளவில் பணம் செலுத்தலாம்!. ”PayPal World” புதிய தளம் அறிமுகம்!

Thu Jul 24 , 2025
அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]
paypal world UPI 11zon

You May Like