மெக்சிகோவில் கனமழை பேரழிவு!. ஒரே நாளில் 64 பேர் உயிரிழப்பு!. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!.

mexico rain death 130

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.


வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Readmore: பயங்கரம்!. எண்ணெய் கப்பலில் தீ விபத்து!. வெடித்து சிதறிய டேங்கர்கள்!. 10 பேர் பலியான சோகம்!

KOKILA

Next Post

கரூர் சம்பவத்திற்கு பிறகு திமுக நடத்திய ரகசிய சர்வே..!! தவெக தனித்து போட்டியிட்டால்..!! அரசியல் களத்தையே மாற்றும் விஜய்..!!

Thu Oct 16 , 2025
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற […]
Vijay Stalin Eps 2025

You May Like