உயிரை பறிக்கும் ‘ஹெபடைடிஸ்’… இரண்டாவது இடத்தில் இந்தியா!!

ஹெபடைடிஸ் காரணமாக இந்தியாவில் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளாவிய பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் பல்வேறு வழிகளில் மக்களை பாதிக்கும் நோய்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் பல நோய்கள் நம்மில் இருக்கிறது என்பதே மிக மிக தாமதமாகத்தான் தெரியும். அதன் பாதிப்புகளை ஆரம்பகட்டத்தில் கண்டறிவது என்பது மிக கடினம். அந்த வரிசையில், கல்லீரல் திசுக்களின் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய்களில் ஹெபடைடிஸ் நோயும் ஒன்று. ஏனெனில், இந்த நோயால் ஒருவர் பாதிப்பட்டு இருப்பது நீண்ட காலத்திற்கு தெரியாத நிலையிலேயே இருக்கும்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஹெபடைடிஸ் வைரஸ் தொற்றினால் 2019ம் ஆண்டு1.1 மில்லியனாக இருந்த பலி எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டு 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் ஹெபடைடிஸ் பி தொற்றினாலும், 17 சதவீதம் பேர் ஹெபடைடிஸ் சி தொற்றினால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தரவுகள் தெளிவுபடுத்துகிறது. மேலும் உலக அளவில் நாள் ஒன்றுக்கு 3,500 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்றனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் உலகளவில் முன்னேற்றம் இருந்தபோதிலும், ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் குறைவாகவே கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுவதால் இறப்புகள் அதிகரித்து வருகின்றன என்று WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பு காணப்படுகிறது. உலகளாவிய பாதிப்பில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

”இதெல்லாம் என்ன மாதிரியான திராவிட மாடல்”..!! முதல்வர் முக.ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை..!!

Wed Apr 10 , 2024
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்று அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளார். உடுமலைப்பேட்டை பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை துணியை கொண்டு டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இந்நிகழ்வை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”திருப்பூர் […]

You May Like