Vijayadharani | விஜயதரணியால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதேபோல் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜயதரணி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஜனவரி 24ஆம் தேதியில் இருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்ததால் தனது MLA பதவியை ராஜினாமா செய்து இருந்தார் விஜயதாரணி. இதன் காரணமாக விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி கலியாகியுள்ளது.

English Summary : The Assembly constituency of Vilavangode is an empty announcement

Read More : Vanangaan | ‘வணங்கான்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகையை அடித்த இயக்குனர் பாலா..!! விலகியதற்கு காரணம் இதுதான்..!!

Chella

Next Post

Himachal | ஆட்சி கவிழும் அபாயம்..!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சுக்வீந்தர் சிங்..!!

Wed Feb 28 , 2024
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2022 இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் […]

You May Like