திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது.
தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி விரதம் கடந்த அக். 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் அக். 27ஆம் தேதி சஷ்டி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். முருகன் கோவில்களில் பல இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம்தான் மிகவும் பிரசித்தி பெற்றது.
திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்தும் பொது மக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி அதிகமானோர் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது.



