நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ஒரு தரப்பினருக்கு குலுக்கல் இன்றி வீடுகள் ஒதுக்க சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.. சென்னை சைதாப்பேட்டை சுப்புபிள்ளை தோட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 பிளாக்களில் 6 மாடிகள் கொண்ட 426 வீடுகள் கட்டப்பட்டுள்ளன..
கடந்த பிப்ரவரி மாதம் குடியிருப்பு திறக்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கு முன் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.. இதில் ஒரு பிரிவை சேர்ந்த 36 குடும்பத்தினருக்கு குலுக்கல் முறை இல்லாமல் ஒரே பிளாக்கில் வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசம் வலியுறுத்தியதால் அதிகாரிகள் குலுக்கல் இல்லாமல் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு, குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த புகார் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.. சுப்பி பிள்ளை தோட்டம் பகுதியில், அமைந்துள்ள குடியிருப்பில் மார்ச் 9-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு 47 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது..
குலுக்கல் நடைபெற்ற போது திட்டப்பகுதி மக்கள் மேல்மாடியில் வீடு வேண்டாம், கீழ் தளம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.. அப்போது ரஞ்சித் என்பவர் அதிகாரிகளிடம் தகாத முறையில் நடந்தார்.. ஒதுக்கீடு தாரர்கள் சிலர் தனி பிளாக் கோரி வாக்குவாதம் செய்தனர்.. மார்ச் 16-ம் தேதி குலுக்கல் நடத்த முன்மொழிவு செய்த நிலையில் தேர்தல் அறிவிப்பு காரணமாக குலுக்கல் நிறுத்திவைக்கப்பட்டது..
முறைப்படி குலுக்கல் முறையில் தான் வீடுகள் ஒதுக்கப்பட்டது.. 4 பிளாக்களிலும் அனைத்து ஒதுக்கீடும் அனைத்து தரப்பினருக்கும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டுள்ளது.. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



