சூரியன் அழியும் காலத்தில் பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் ஒரு புதிய பதிலை முன்வைத்துள்ளது. இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தனது இறுதி நிலையை அடைந்து விரிவடையும் போது, அது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விழுங்கி பூமியையும் அழித்துவிடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க கேப்ரியல் ஹாரி என்ற சுயேச்சை ஆராய்ச்சியாளர் ‘ஜர்னல் ஆஃப் தி பிரிட்டிஷ் இன்டர்பிளானட்டரி சொசைட்டி’ இதழில் மூன்று முதன்மை வழிகளைப் பரிந்துரைத்துள்ளார். முதலாவதாக, சூரியனின் கதிர்வீச்சை தடுக்க நிலவின் வளங்களை கொண்டு 700,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான நிழற்குடையை உருவாக்கி விண்வெளியில் நிலைநிறுத்தலாம்.
இரண்டாவதாக, இந்த நிழற்குடையால் பூமி மிகவும் குளிர்ந்து போவதைத் தவிர்க்க வியாழன் கிரகத்தின் வாயுக்களைப் பயன்படுத்தி அணுக்கரு உலைகள் மூலம் ஒரு செயற்கை சூரியனை உருவாக்க முடியும். மூன்றாவதாக, விரிவடையும் சூரியன் பூமியை விழுங்காமல் இருக்க, விண்வெளியில் துகள் கற்றை விசையை பாய்ச்சி பூமியை இப்போது இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவுக்கு நகர்த்த முடியும்.
இந்த மெகா திட்டங்களைச் செயல்படுத்த கட்டுக்கடங்காத தொழில்நுட்ப வளர்ச்சி தேவைப்படும். இது ஒரு அறிவியல் புனைகதை போல தோன்றினாலும், எதிர்கால அதிநவீன மனித நாகரிகம் மூலம் பூமியை மேலும் பல மில்லியன் பில்லியன் ஆண்டுகள் வாழத் தகுதியான இடமாக வைத்திருக்க முடியும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
Read More : கோவில்களில் போட்டோ, வீடியோவுக்கு தடை..! சினிமா பிரபலங்கள், விஐபிக்களுக்கு அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..!



