பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலம் வரையிலான பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு மேற்கொண்ட செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளன.
அதன்படி, 2021ஆம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் ரூ.36.11 கோடி செலவிடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டான 2022இல் இந்த செலவு அதிகரித்து சுமார் ரூ.55.82 கோடியாக உயர்ந்தது. தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில் உலக நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்காக சுமார் ரூ.93.63 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தச் செலவினம் மேலும் உயர்ந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் ரூ.109.51 கோடியும், 2025-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக சுமார் ரூ.180 கோடியும் பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளன.
தற்போதைய ஆண்டைப் பொறுத்தவரையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்தில் இருந்து சுமார் ரூ.74.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, நார்வே நாட்டிற்கான அரசுமுறைப் பயணத்திற்காக மட்டும் ரூ.17.46 கோடியும், இஸ்ரேல் நாட்டுப் பயணத்திற்காக ரூ.11.92 கோடியும் செலவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கோவில்களில் போட்டோ, வீடியோவுக்கு தடை..! சினிமா பிரபலங்கள், விஐபிக்களுக்கு அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..!



