கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்! ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்…

crime

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.


பரீதாபாத்தில் 42 வயதுடைய சியாம்வீர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவிக்கும் காமத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு குறித்து சியாம்வீருக்கு தெரியவந்ததால், மனைவியுடன் அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, கணவரை கொலை செய்ய சியாம்வீரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் திட்டமிட்டுள்ளனர். திட்டத்தின் அடிப்படையில், சியாம்வீருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளனர். அவர் மதுபோதையில் இருந்தபோது, காமத் இன்டர்லாக் கல்லால் அவரது தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

கொலையை மறைக்கும் வகையில், சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விசாரணையை தொடங்கிய குற்றப்பிரிவு போலீசார், தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் மனைவி மற்றும் காமத் ஆகிய இருவரையும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். தொடர்ந்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பிரசவத்துக்குப் பிறகு வரும் மனநலப் பிரச்சினைகள்.. எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

Saranya

Next Post

அமெரிக்க கல்வி கனவில் பேரிடி!. விசா கெடுபிடிகளால் சரிந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை!

Wed Aug 26 , 2026
அமெரிக்காவில் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலியாக, நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘காமன் ஆப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காமன் ஆப்’ என்பது அமெரிக்கா மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். கடந்த 2024-2025 கல்வி ஆண்டைக் காட்டிலும், 2025-2026 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் சேர விரும்பும் […]
indian students us 30kb

You May Like