கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர்கள் சரவணன் (25) – முத்துலட்சுமி (20) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்களாகின்றன.. இந்த தம்பதிக்கு மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சரவணனின் அம்மா மங்கம்மாவின் அலறல் சத்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சரவணன் ரத்தத்தில் மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், சரவணனின் பக்கத்து ரூம் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. யாரோ மங்கம்மாவை ரூமில் வைத்து வெளிப்பக்கமாக பூட்டியதாக கூறப்படுகிறது. பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்திற்கு பிறகு முத்துலட்சுமி மாயமாகினார். அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஊரை விட்டு ஓட முயன்ற முத்துலட்சுமியுடன் சேர்த்து சூர்யா, சக்தி, சந்தோஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. தகவலின்படி ஸ்கூல் படிக்கும்போதே சூர்யாவும், முத்துலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள். ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனை காதலித்து, திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும், திருமணத்திற்கு பிறகும் பழைய காதலன் சூர்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் சரவணனுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யாவுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட முத்துலட்சுமி முடிவுசெய்துள்ளார். அதன்படி, சம்பவத்தன்று வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், சூர்யா தன்னுடைய நண்பர்கள் சக்தி, சந்தோஷ் இருவரையும் அழைத்து கொண்டு முத்துலட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்தார்.
சரவணனின் அம்மா மங்கம்மா தூங்கி கொண்டிருந்த அறை கதவை வெளியே பூட்டிவிட்டு மூன்றுபேரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சரவணனை அடித்தே கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் 4 மாவட்டத்தை தேர்வு செய்த மத்திய அரசு…!



