கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியை சேர்ந்தவர் சங்கப்பா (40). இவரது மனைவி மாரம்மா (35). கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு சில வருடமாக தன்னுடைய அம்மா வீட்டில் மாரம்மா வசித்து வந்துள்ளார். இதனிடையே தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர சங்கப்பா மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மனைவி வர மறுத்ததால் அங்கேயே தங்கியுள்ளார். சம்பவத்தன்று இரவு தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டிலிருந்த கோடாரியால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாரம்மா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கப்பா பயத்தில் அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கரப்பா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



