கர்நாடக மாநிலம் பெலகாவியில், ஒரு நபர் தனது மனைவி மீது தீ வைத்த எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெலகாவியில் ஹத்தாரவாடா கிராமத்தில் கிருஷ்ணா என்ற நபர் தனது மனைவி மஞ்சுளா உடன் வசித்து வந்துள்ளார்.. இந்த சூழலில் மஞ்சுளா ‘நைட்டி’ (nighty) அணிந்திருந்ததைக் கண்டு கிருஷ்ணா கோபமடைந்ததாக கூறப்படுகிறது.. இது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததது.. இதனால் அவர் தனது மனைவியை தீ வைத்து எரித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் மஞ்சுளா பாட்டீல் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவினர்; அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் தற்போது பெலகாவி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (BIMS) சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா பாட்டீல், தினக்கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்; இவர் தனது குடும்பத்துடன் ஹத்தாரவாடா கிராமத்தில் வசித்து வந்தார். இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே, மஞ்சுளா நைட்டி அணிவதைத் தேர்ந்தெடுத்தது தொடர்பாகத் தம்பதியினரிடையே சண்டை நடந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைட்டி அணியக் கூடாது என்று கிருஷ்ணா ஏற்கனவே பல முறை கூறியதாகவும், சம்பவம் நடந்த நாளன்று, மஞ்சுளா நைட்டி அணிந்திருந்ததாகௌவ்ம் கூறப்படுகிறது… இதனால் ஆத்திரமடைந்த அவர் மஞ்சுளாவின் மீது தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணா மற்றும் மஞ்சுளா ஆகியோருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் தான் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். நந்த்கட் காவல் நிலையத்தில் இதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது; இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



