கணவன் vs காதலன்..!! இப்படி ஒரு கேஸை இதுவரை பார்த்ததில்ல..!! போலீசாரையே அதிரவைத்த இளம்பெண்..!!

UP 2026

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பகலில் கணவருடனும் இரவில் காதலனுடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதி கோரி காவல் நிலையத்தில் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்த போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது.


சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு வர்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நிதின் விஸ்வகர்மா என்ற வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்து குடும்பத்தில் கடுமையான வாக்குவாதம் வெடித்ததை தொடர்ந்து, பிரச்சனைக்கு தீர்வு காண ஒட்டுமொத்த குடும்பத்தினரும் உள்ளூர் காவல் நிலையத்தை அணுகினர்.

அங்கு போலீசார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, தன்னால் கணவனையும் பிரிய முடியாது, காதலனையும் கைவிட முடியாது என தெரிவித்த அந்தப் பெண், பகல் நேரங்களில் கணவருடனும், கணவர் வேலைக்கு செல்லும் இரவு நேரங்களில் காதலனுடனும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திக் கொள்வதாக ஒரு முடிவை கூறினார். இதற்கு அவரது கணவர் சுபமும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தனது முழு சம்மதத்தை தெரிவித்த சம்பவம் அங்கிருந்தவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனினும், கணவரின் தந்தை மற்றும் சகோதரிகள் சமூக கட்டுப்பாடுகளையும் குடும்ப கௌரவத்தையும் சுட்டிக்காட்டி இத்தகைய விபரீத முடிவுக்கு மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மூவருமே இந்த உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்த போதிலும், சட்ட விதிகளுக்குப் புறம்பான இக்கோரிக்கையை கையாள்வதில் விழிபிதுங்கி நின்ற போலீசார், அவர்களுக்கு பல மணி நேரம் சட்ட விதிகளையும் சமூக ஒழுக்க நெறிமுறைகளையும் எடுத்துக்கூறி கவுன்சிலிங் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Read More : சர்க்கார் நடத்துறீங்களா? சர்க்கஸ் கம்பெனி நடத்துறீங்களா? கேள்வி கேட்டா பதில் சொல்லாம.. தவெக அரசை விளாசிய உதயநிதி

Next Post

இல்லத்தரசிகளே ஷாக்!. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.20 லட்சத்தை கடந்தது!. இன்றைய நிலவரம் இதோ!.

Mon Aug 24 , 2026
உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை நோக்கித் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்தன. இதன் விளைவாக, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தையும், வெள்ளியின் விலை 15 வார கால உச்சத்தையும் எட்டின. அந்தவகையில் வாரத்தின் முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 24) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 […]
gold price nn

You May Like