மருதமலை படத்தில் போலீஸ் ஏட்டாக இருக்கும் வடிவேலுவிடம் ஒரே பெண்ணுக்கு 4 பேர் கணவர் என வந்து சண்டை போடுவார்கள்… காமெடிக்காக எடுக்கப்பட்டு இருக்கும் இந்த காட்சியை போன்ற சம்பவம் சேலத்திலும் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகள், எங்கள் குடும்பத்தினால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாகவும், கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
பிரியா, ஹரிஷ் குமார் என்ற அந்த காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருவரின் உறவினர்களும் ஸ்டேஷனுக்கு வந்தனர். அதில் ஒருவர் நான்தான் அந்த பெண்ணிற்கு முறைபடி தாலி கட்டிய முதல் கணவர் என்று கூறினார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், பல அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது, பிரியா 4 வருடங்களுக்கு முன்பு ராமு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். சின்ன திருப்பதியில் துணிக்கடை வைத்திருக்கிறார்.. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கணவர் துணிக்கடை வைத்திருந்தும்கூட, மற்றொரு துணிக்கடையில் வேலைக்கு சென்றுள்ளர். அப்போது ஹரிஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஹரிஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிரியா, வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இருவரும் ஊட்டிக்கு சென்று திருமணமும் செய்து கொண்டனர். அதன்பிறகு, கணவர் தங்களை பிரித்துவிடுவாரோ என்று பயந்து கொண்டு, போலீசில் தஞ்சம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.
கணவரை விவாகரத்து செய்யாமல், திருமணம்செய்வது தவறு என்று போலீசார் அறிவுறுத்தியதுடன், பெற்றோருடன் பிரியாவை போலீசார் அனுப்பி வைத்தனர். மற்றொருபக்கம் கணவர் ராமு தன்னுடன் மனைவியை அனுப்புங்கள் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். வடிவேலு பட பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளானது.
Read more: 5 ஆண்டுகளில் வட்டி மட்டும் ரூ. 3 லட்சம் கிடைக்கும்.. சூப்பரான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்..!



